செய்திகள்

 மீண்டது ஆர்ஜென்டீனா

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா தனது 2-ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. 

முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் தோற்று அதிர்ச்சியில் இருந்த ஆர்ஜென்டீனா, இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான பந்தயத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்த மெக்ஸிகோ, தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்தது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் ஆட்டத்தின் தோல்வியிலிருந்து மீள்வதற்கான முனைப்புடன் ஆடியது ஆர்ஜென்டீனா. ஆனால், அந்த முயற்சிகளுக்கான பலனை அவ்வளவு எளிதாக மெக்ஸிகோ விட்டுத் தருவதாகத் தெரியவில்லை. மாறாக, 9-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதை அந்த அணி வீணடித்தது. 

21-ஆவது நிமிஷத்தில் பந்தைத் தடுக்க முயன்றபோது ஆர்ஜென்டீன வீரர் அகுனாவை காலால் மிதித்ததற்காக மெக்ஸிகோ வீரர் அரெüஜோவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் 40-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணி வீணடித்தது. 43-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோ வீரர் குட்டெரெûஸ கீழே தள்ளியதற்காக ஆர்ஜென்டீனாவின் கொன்ஸôலோ மான்டியெலுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. 

அதில் மெக்ஸிகோவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக விடாமல் அருமையாகத் தடுத்தார் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் இரு அணிகளுக்குமே கிடைத்த மேலும் சில ஃப்ரீ கிக் வாய்ப்புகள் கோலாக மாறாமல் போயின. 

இறுதியாக, ஆட்டத்தின் முதல் கோலை மெஸ்ஸி 64-ஆவது நிமிஷத்தில் அடித்தார். ஏஞ்சல் டி மரியாவிடமிருந்து பாஸ் பெற்ற மெஸ்ஸி, கோல் போஸ்ட்டிலிருந்து 25 மீட்டர் தொலைவில் நின்றபடியே போஸ்டின் வலதுபக்க கீழ்பகுதிக்குள்ளாக பந்தை உதைத்து கோல்கீப்பர் பந்தை எட்ட முடியாதவ வகையில் கோலடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக, 87-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு 2-ஆவது கோல் வாய்ப்பும் கிடைத்தது. 

இறுதிவரை இந்த முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட ஆர்ஜென்டீனா கடைசியில் வெற்றி பெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT