செய்திகள்

விஜய் ஹசாரே காலிறுதி: தமிழக அணிக்கு 294 ரன்கள் இலக்கு!

28th Nov 2022 02:11 PM

ADVERTISEMENT

 

விஜய் ஹசாரே காலிறுதி ஆட்டத்தில் தமிழகத்துக்கு எதிராக செளராஷ்டிர அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 28-வது ஓவரில் 131 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது செளராஷ்டிரம். ஹர்விக் தேசாய் 61, அர்பித் 51, சிராஜ் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து செளராஷ்டிர அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்கள். செளராஷ்டிர அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணியில் எம். முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தமிழக அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜெகதீசன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT