செய்திகள்

ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களுடன் 220 ரன்கள்: சிஎஸ்கே ருதுராஜ் புதிய சாதனை!

28th Nov 2022 01:28 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெயிக்வாட், தற்போது விஜய் ஹசாரே போட்டியில் மஹாராஷ்டிர அணியின் கேப்டனாக உள்ளார்.

உத்தரப் பிரதேச அணி - மஹாராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் இன்றைய ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். 109 பந்துகளில் சதமடித்த ருதுராஜ், 138 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகு இன்னும் அதிரடியாக விளையாடிய 153 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஷிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7 சிக்ஸர்களைத் தொடச்சியாக அடித்து சாதனை செய்தார் ருதுராஜ். அந்த ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டதால் 7-வது சிக்ஸரை அடிக்கும் வாய்ப்பு ருதுராஜுக்குக் கிடைத்தது. கடைசியில் 159 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 220 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். மஹாஷ்டிர அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. 

ADVERTISEMENT

முதல் 109 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ருதுராஜ் அதற்குப் பிறகு 50 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 120 ரன்களைக் குவித்தார்.

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 8 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 5 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ். அதன் விவரங்கள்

136 vs மத்தியப் பிரதேசம்
154* vs சத்தீஸ்கர் 
124 vs கேரளம் 
21 vs உத்தரகண்ட் 
168 vs சண்டிகர் 
124* vs ரெயில்வே 
40 vs பெங்கால் 
220* vs உத்தரப் பிரதேசம் (இன்று) 

ADVERTISEMENT
ADVERTISEMENT