செய்திகள்

உலகக் கோப்பை: 8-ம் நாளில் அடிக்கப்பட்ட கோல்களின் விடியோ

28th Nov 2022 11:20 AM

ADVERTISEMENT

 

உலகக் கோப்பைப் போட்டியின் 8-ம் நாளில் கோஸ்டா ரிக்கா, மொராக்கோ, குரோசியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி - ஸ்பெயின் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

கோஸ்டா ரிக்கா, ஜப்பானை 1-0 எனவும் மொராக்கோ, பெல்ஜியத்தை 2-0 எனவும் குரோசியா கனடாவை 4-1 எனவும் வீழ்த்தின. 

இந்த டிராவினால் குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக ஸ்பெயின் ஒரு புள்ளி எடுத்தாலே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அந்த அணி தகுதி பெற்றுவிடும். வெற்றி பெற்றால் இந்தப் பிரிவில் ஸ்பெயினுக்கு முதல் இடம் கிடைக்கும். தற்போது ஜெர்மனி கடைசி இடத்தில் இருந்தாலும் அடுத்த ஆட்டத்தில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தி, ஸ்பெயினிடம் ஜப்பான் தோற்றால், ஜெர்மனி 2-ம் இடத்துக்கு முன்னேறி அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். ஸ்பெயின் - ஜப்பான் ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் கோல்கள் அடிப்படையில் 2-வது அணி தேர்வு செய்யப்படும்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT