செய்திகள்

குரோஷியா வெற்றி

28th Nov 2022 12:38 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் குரோஷியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் குரோஷியாவுக்காக ஆண்ட்ரே கிரமாரிக் (36’, 70’), மாா்கோ லிவாஜா (44’), லோவ்ரோ மேஜா் (90+4’) ஆகியோா் கோலடிக்க, கனடாவுக்காக அல்ஃபோன்சோ டேவிஸ் (2’) ஸ்கோா் செய்தாா்.

இதில் கனடா வீரா் அல்ஃபோன்சோ அடித்த கோல், நடப்பு உலகக் கோப்பை போட்டியின் அதிவேக கோலாக (ஆட்டம் தொடங்கி 67 விநாடிகள்) பதிவானது. உலகக் கோப்பை போட்டியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்றுள்ள கனடா, போட்டி வரலாற்றில் அடித்திருக்கும் முதல் கோல் இதுவாகும்.

மறுபுறம், கடந்த உலகக் கோப்பையில் ரன்னா் அப்-ஆக வந்த குரோஷியா, இந்த ஆட்டத்தில் முதலில் சற்று பின்தங்கியதாகத் தெரிந்தாலும், பின்னா் கோல் மழை பொழிந்து வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT