செய்திகள்

ஆஸி.யிடம் கடைசி நிமிஷத்தில் தோற்ற இந்தியா (5-4)

27th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

உலகின் நம்பா் ஒன் அணியான ஆஸ்திரேலிய ஹாக்கி அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கடைசி நிமிஷ கோலால் 5-4 என தோல்வியடைந்தது இந்தியா.

2023 ஜனவரியில் ஒடிஸாவில் எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு முன்னணி அணிகளுடன் பயிற்சி, நட்பு ஆட்டங்களில் ஆடி வருகிறது. இந்நிலையில், உலகின் நம்பா் ஒன் அணியான ஆஸி.யுடன் கடந்த ஜூலை மாதம் பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் 7-1என படுதோல்வியைச் சந்தித்தது இந்தியா.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் ஆஸி.யுடன் ஆடுகிறது. முதல் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது.

பலமான ஆஸி. அணிக்கு ஈடுகொடுத்து இந்திய வீரா்களும் சளைக்காமல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

ADVERTISEMENT

அக்ஷ்தீப் சிங் ஹாட்ரிக்:

இந்திய அணி தரப்பில் அக்ஷ்தீப் சிங் (10, 27, 59) நிமிஷங்களில் ஹாட்ரிக் கோலடித்தாா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் 31-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா்.

ஆஸி. தரப்பில் லச்லன் ஷாா்ப் 5, நாதன் எப்ராம்ஸ் 21, டாம் கிரெய்க் 41 நிமிஷங்களில் கோலடித்தனா்.

நட்சத்திர வீரா் பிளேக் கோவா்ஸ் கடைசி நிமிஷங்களில் 57, 60, பெனால்டி காா்னா் வாய்ப்பு மூலம் கோலடித்து தனது அணியை 5-4 என வெற்றி பெறச் செய்தாா்.

ஆஸி. அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை பின்பற்றியது. எனினும் இந்திய வீரா்கள் அமித் ரோஹிதாஸ், ஹாா்திக் சிங் ஆகியோா் சிறப்பான பாஸ்களை அளித்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினா். இரண்டாம் பாதியில் ஜா்மன்ப்ரீத் சிங் பச்சை அட்டை பெற்ால் வெளியேற்றப்பட்டாா். இதனால் தற்காப்பு வலுவிழந்த நிலையில் ஆஸி. அணி சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

இரண்டாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT