செய்திகள்

2ஆவது ஒருநாள் போட்டி: ஓவர்கள் குறைப்பு , வெற்றி பெறுமா இந்தியா?

27th Nov 2022 11:45 AM

ADVERTISEMENT

மழையால் தாமதமான இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

நியூசிலாந்து - இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. 

இதையும் படிக்க: தடை நீக்கம்: ஓடிடி 'காந்தாரா'வில் வராஹரூபம் பாடல் எப்போது?

4.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. 4.5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 19 ரன்களுடனும், தவான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: போலந்திடம் சரிந்தது சவுதி

முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT