செய்திகள்

2ஆவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து , தொடரை சமன் செய்யுமா இந்தியா?

27th Nov 2022 01:22 PM

ADVERTISEMENT

மழையால் தாமதமான இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

நியூசிலாந்து - இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்து வந்தது.

4.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. 4.5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 19 ரன்களுடனும், தவான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையும் படிக்க: தடை நீக்கம்: ஓடிடி 'காந்தாரா'வில் வராஹரூபம் பாடல் எப்போது?

ADVERTISEMENT

மழை காரணத்தால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. ஷிகர் தவன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஷுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 89 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. 

பின்னர், ஹேமில்டனில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் மழைக் காரணமாக போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஷுப்மன் கில் 45 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையும் படிக்க: ஆர்ஜென்டினாவின் ஆன்ம பலம் லியனல் மெஸ்ஸி!


முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

தொடரை இழக்காமல் இருக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடியும். தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழக்கக் கூடும்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT