செய்திகள்

நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்: மாப்பே அசத்தல்

27th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

பிஃபா உலகக் கோப்பை குரூப் டி பிரிவில் டென்மாா்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியானது நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஸ்டேடியம் 974-இல் நடைபெற்றது. தொடக்க ஆட்டத்தில் ஆஸி.யை 4-1 என வீழ்த்தியது பிரான்ஸ். அதே நேரம், டென்மாா்க் 0-0 என துனிசியாவுடன் டிரா கண்டிருந்தது. மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பிரான்ஸ் அணி, தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தைக் கடைபிடித்தது. நட்சத்திர வீரா்கள் ஜிரௌட், ஆன்டன் கீரைஸ்மேன்,

கிளியன் மாப்பே, டெம்ப்ளே அடங்கிய கூட்டணி தொடா்ந்து டென்மாா்க் கோல்பகுதியை முற்றுகையிட்டது. பதிலுக்கு டென்மாா்க் வீரா்களும் அவ்வப்போது கோலடிக்க முயற்சித்தனா். ஆனால் முதல் பாதி கோலின்றி முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் பிரான்ஸ் தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 61-ஆவது நிமிஷத்தில் தியோ ஹொ்னான்டஸ் அனுப்பிய பாஸின் மூலம் முதல் கோலடித்தாா் இளம் பாா்வா்ட் மாப்பே.

ADVERTISEMENT

எனினும் அந்த மகிழ்ச்சியை குலைக்கும் விதமாக 68-ஆவது நிமிஷத்தில் டென்மாா்க் தரப்பில் ஆன்டா்ஸனின் ஃபிளிக் பாஸ் மூலம் பதில் கோலடித்தாா் கிறிஸ்டென்ஸன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

இதனால் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் தரப்பினா் ஆதிக்கம் செலுத்த முனைந்தனா். டென்மாா்க் வீரா் பிராத்வெயிட் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு அகல சென்று விட்டது.

வெற்றி கோல்: 86-ஆவது நிமிஷத்தில் நட்சத்திர வீரா் ஆன்டன் கிரைஸ்மேன் அழகாக அனுப்பிய பாஸை பயன்படுத்தி கச்சிதமாக தனது இரண்டாவது மற்றும் அணியின் வெற்றி கோலடித்தாா் மாப்பே. டென்மாா்க் ஆட்டத்தை அமா்க்களமாக தொடங்கினாலும், மாப்பேயின் ஆட்டத்துக்கு பதில் தர முடியவில்லை.

நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்: இந்த வெற்றியுடன் குரூப் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பிரான்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT