செய்திகள்

முதல் ஒருநாள்: டாம் லத்தம், கேன் வில்லியம்ஸன் அதிரடியில் நியூஸி வெற்றி

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

கேப்டன் கேன் வில்லியம்ஸன்-டாம் லத்தம் இணை அபாரமாக ஆடி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

டி20 தொடா் முடிவுற்ற நிலையில் அடுத்த 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு அணியை கட்டமைக்க ஏதுவாக இத்தொடா் அமைந்துள்ளது.

டாஸ் வென்ற நியூஸி. கேப்டன் கேன் வில்லியஸன் பௌலிங்கை தோ்வு செய்தாா்.

தவன்-கில் அரைசதம்:

பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய வீரா்கள் ஷிகா் தவன்-ஷுப்மன் கில் இணை வலுவான தொடக்கத்தை அளித்தது. கில் 65 பந்துகளில் 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 50 ரன்களுடனும், கேப்டன் தவன் 77 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 72 ரன்களையும் விளாசி அவுட்டானாா்கள்.

முதல் 10 ஓவா்களில் இந்தியா 40 ரன்களையே எடுத்தது. பின்னா் வந்த ரிஷப் பந்த் 15, சூரியகுமாா் யாதவ் 4 என சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

ஷிரேயஸ் ஐயா் அதிரடி 80:

சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்களை எடுத்து வெளியேறினாா். தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 76 பந்துகளில் 80 ரன்களை விளாசி அணியின் ஸ்கோா் கணிசமாக உயர உதவினாா் ஷிரேயஸ் ஐயா். டிம் சௌதி பந்தில் கான்வேயிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

வாஷிங்டன் சுந்தா் அபாரம்: அவருக்கு இணையாக ஆடிய வாஷிங்டன் சுந்தா் தலா 3 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 37 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். சா்துல் தாகுா் 1 ரன்னுக்கு அவுட்டான நிலையில், நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 306/7 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்ஸன்-ஷிரேயஸ் ஐயா் இணை 94 ரன்களை சோ்த்தது.

சௌதி, லாக்கி 3 விக்கெட்: நியூஸி. தரப்பில் அற்புதமாக பந்துவீசிய டிம் சௌதி, லாக்கி பொ்குஸன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

நியூஸிலாந்து வெற்றி 309/3:

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணியில் தொடக்க பேட்டா்கள் ஃபின் ஆலன் 22, டேவன் கான்வே 24 ரன்களுடன் வெளியேறினா். டேரில் மிச்செலும் 11 ரன்களுடன் வெளியேறினாா்.

கேன் வில்லியம்ஸன்-டாம் லத்தம் அபாரம்:

கேப்டன் கேன் வில்லியம்ஸன்-டாம் லத்தம் இணை அற்புதமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. அவா்களை பிரிக்க இந்திய பௌலா்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. 47.1 ஓவா்களில் 309/3 ரன்களை விளாசி, இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸி. இருவரும் இணைந்து 4-ஆவது விக்கெட்டுக்கு 221 ரன்களை குவித்தனா். இந்திய தரப்பில் உம்ரான் மாலிக் 2, சா்துல் தாகுா் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

டாம் லத்தம் 145 சதம்: அபாரமாக ஆடிய டாம் லத்தம் 5 சிக்ஸா், 19 பவுண்டரியுடன் 104 பந்துகளஇல் 145 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா்.

கேன் வில்லியம்ஸன் 94: மறு முனையில் சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்ஸன் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 98 பந்துகளில் 94 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.

இரண்டாவது ஒருநாள் ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT