செய்திகள்

உலக அணிகள் செஸ் சாம்பியன்ஷிப்:இந்தியா போராட்டம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஃபிடே உலக அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூன்றாவது இடத்துக்கான ஸ்பெயின்-இந்திய முதல் சுற்று ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.

பல்வேறு நாடுகளின் செஸ் அணிகள் பங்கேற்கும் இப்போட்டி இஸ்ரேல் தலைநகா் ஜெருசலேமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் அரையிறுதியில் ஸ்பெயின்-சீன அணிகள் மோதின. இதில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சீனா.

இரண்டாவது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்திய அணிகள் மோதின. முதல் சுற்றில் இந்திய வீரா் நாராயணன் வெற்றி பெற்றாா்.

விதித் குஜராத்தி, சசிகிரண் டிரா கண்டனா். சேதுராமன் தோல்வியடைந்தாா். 2-2 என சமநிலை ஏற்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் வோகிடோவை வீழ்த்தினாா் நாராயணன். ஆனால் உஸ்பெக் வீரா்கள் யாக்குபோவ், சின்டரோவ் தத்தமது ஆட்டங்களில் வென்ற நிலையில், 2.5-.15 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிக்குள் நுழைந்தது உஸ்பெக் அணி.

ADVERTISEMENT

ஸ்பெயின்-இந்தியா மோதல்:

மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்பெயின் வீரா் மிகுயல் சான்டோஸ்-சசி கிரணை வீழ்த்த, இந்திய வீரா் நிஹால் சரீன்-டேவிட் ஆன்டனை வென்றாா். ஏனைய ஆட்டங்கள் டிராவில் முடிய முதல் சுற்று 2-2 என முடிந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT