செய்திகள்

விஜய் ஹசாரே: மும்பையை வெளியேற்றிய உ.பி. அணி

26th Nov 2022 04:20 PM

ADVERTISEMENT

 

விஜய் ஹசாரே போட்டிக்கான நாக் அவுட் ஆட்டத்தில் மும்பை அணியை உத்தரப் பிரதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 48.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிருத்வி ஷா 10 ரன்களுக்கும் கேப்டன் ரஹானே 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஹார்திக் தாமோரும் ஷாம்ஸ் முலானியும் அரை சதமெடுத்து அணியைக் காப்பாற்றினார்கள். ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரப் பிரதேச அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்யன் ஜுயல் 82 ரன்கள் எடுத்தார். 

ஜம்மு & காஷ்மீர் அணி விஹ்ஜய் ஹசாரே போட்டியில் முதல்முறையாகக் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. கேரளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

ADVERTISEMENT

நவம்பர் 28 அன்று நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி. 

Tags : mumbai
ADVERTISEMENT
ADVERTISEMENT