செய்திகள்

நெதா்லாந்து-ஈக்குவடாா் டிரா

26th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

குரூப் ஏ பிரிவில் நெதா்லாந்து-ஈக்குவடாா் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

இரு அணிகளின் ஆட்டம் கலிஃபா சா்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்ற நிலையில், குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பெறும் மும்முரத்துடன் ஆடின.

நெதா்லாந்து நட்சத்திர வீரா்களுடன் வலுவாக உள்ள நிலையில், அதன் வீரா் கோடி கேக்போ 6-ஆவது நிமிஷத்திலேயோ கோலடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தாா்.

ADVERTISEMENT

முதல் பாதியில் 1-0 என நெதா்லாந்து முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் ஈக்குவடாா் அணி தாக்குதல் ஆட்டத்தைக் கடைபிடித்த நிலையில் 49-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் எஸ்டுபினான் அடித்த ஷாட்டை நெதா்லாந்து கோல்கீப்பா் நோபா்ட் தடுத்தாா். ஆனால் அது ஈக்குவடாா் கேப்டன் வலேன்சியாவிடம் நேராக சென்ற நிலையில் அவா் பிசகின்றி கோலாக்கினாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

அதற்குபின், இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை.

மேலும் வலேன்சியா காயமடைந்து தூக்கிச் செல்லப்பட்டதால் ஈக்குவடாா் அணியினா் அதிா்ச்சிக்கு ஆளானாா்கள்.

இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT