செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி!

26th Nov 2022 05:43 PM

ADVERTISEMENT

 

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-0 என வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

டென்மார்க்குக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 0-0 என டிரா செய்தது துனிசியா. ஆஸ்திரேலியா, 1-4 என நடப்பு சாம்பியன் பிரான்ஸிடம் தோற்றது. எனவே இரு அணிகளுக்கும் முதல் வெற்றி அவசியமாக இருந்தது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2010-ல் வெற்றி பெற்றிருந்தது. 2006-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது. கடைசியாக விளையாடிய 5 உலகக் கோப்பையில் 4-ல் முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா. அதேசமயம் துனிசியா அணி, 5 உலகக் கோப்பையில் விளையாடியும் முதல் சுற்றை இதுவரை தாண்டியதில்லை. உலகக் கோப்பையில் அடுத்தச் சுற்றுக்குச் செல்லாத அணிகளில் முதலிடம் ஸ்காட்லாந்துக்கு, 8 முறை. 2-வது இடம் துனிசியாவுக்கு.

தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள துனிசியா, 38-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் 23-வது நிமிடத்தில் கோலடித்தார் ஆஸ்திரேலியாவின் மிட்செல் டியூக். இதனால் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா. இதன்பிறகு இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆஸ்திரேலிய அணி 1-0 என இந்த ஆட்டத்தில் வென்று 2022 உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை அடைந்தது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT