செய்திகள்

உலகக் கோப்பை: அடுத்த இரு ஆட்டங்களைத் தவறவிடும் நெய்மர்!

26th Nov 2022 03:26 PM

ADVERTISEMENT

 

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது.

செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என வென்றது பிரேசில் அணி. நவம்பர் 28 அன்று ஸ்விட்சர்லாந்துக்கு எதிராகவும் முதல் சுற்றின் கடைசி ஆட்டமாக டிசம்பர் 2 அன்று கேமரூனையும் எதிர்கொள்கிறது. 

செர்பியாவுக்கு எதிராக விளையாடும்போது பிரேசிலின் பிரபல நட்சத்திர வீரர் நெய்மருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து முதல் ஆட்டத்தில் காயமடைந்த நெய்மர் மற்றும் டேனிலோ ஆகிய இருவரும் ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடைசி ஆட்டத்தில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீதமுள்ள குரூப் ஆட்டங்களில் நெய்மர் இல்லாமல் விளையாடவுள்ளது பிரேசில் அணி. இருவருக்கும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது காயம் பற்றி இன்ஸ்டகிராமில் நெய்மர் அறிவித்துள்ளார். விரைவில் விளையாட வருவேன் என அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

2014 உலகக் கோப்பைக் காலிறுதியில் கொலம்பியாவுக்கு எதிராக விளையாடியபோது நெய்மருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் நெய்மர் விளையாட முடியாமல் போனது. அந்த ஆட்டத்தில் பிரேசில் தோற்றது. 

பிரேசில் அணிக்காக விளையாடிய 122 ஆட்டங்களில் 75 கோல்களை அடித்துள்ளார் நெய்மர். இன்னும் இரு கோல்கள் அடித்தால் பிரேசில் அணிக்காக அதிக கோல்களை அடித்த பீலேவின் சாதனையைத் தொட்டுவிடுவார். 

Tags : Brazil Neymar
ADVERTISEMENT
ADVERTISEMENT