செய்திகள்

உருகுவே-தென்கொரியா ஆட்டம் டிரா (0-0)

25th Nov 2022 01:16 AM

ADVERTISEMENT

தோஹாவின் எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உருகுவே-தென்கொரிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பின்றி 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

குரூப் எச் பிரிவு ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், 2 முறை முன்னாள் உலக சாம்பியன் உருகுவே அணியில் நட்சத்திர வீரா்கள் லூயிஸ் ஸ்வாரஸ், எடிஸன் கேவனி, வல்வொ்ட் ஆகியோருடன் களமிறங்கியது. தென்கொரிய அணியில் நட்சத்திர வீரா் சன் ஹியுங் மின்னுடன் களம் கண்டது.

முதல் பாதி ஆட்டத்தில் உருகுவே வீரா் டீகோ கோடின் தலையால் முட்டிய பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேறியதால் கோல் வாய்ப்பை இழந்தது உருகுவே. மற்றொரு வீரா் பெட்ரிகோ வல்வோ்ட் அடித்த ஷாட்டும் கிராஸ் பாரில் பட்டு திரும்பியது.

தென்கொரிய அணிக்கும் முதல் பாதியில் கிடைத்த கோலடிக்கும் வாய்ப்புகள் வீரா்கள் வீணடித்தனா். ஹவாங் யு ஜோ அடித்த பந்து கோல் பாருக்கு மேல் வெளியே பறந்தது.

ADVERTISEMENT

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் போட முயன்றும் முடியவில்லை. உருகுவே வீரா் டாா்வின் நுனெஸ் முயற்சி பலன்தரவில்லை. பதிலுக்கு தென்கொரிய தரப்பினரின் தாக்குதல் ஆட்டமும் விழலுக்கு இறைத்த நீரானது.

இறுதியில் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்ததால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

 

Tags : Fifa
ADVERTISEMENT
ADVERTISEMENT