செய்திகள்

ரூபே பிரைம் வாலிபால் லீக் 2023; பிப்ரவரி 4-இல் தொடக்கம்

DIN

நாட்டின் தலைசிறந்த வாலிபால் வீரா்கள் மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக ரூபே பிரைம் வாலிபால் (ஏ23) லீக் இரண்டாம் கட்ட போட்டி2023 பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்குகிறது.

காலிக்கட் ஹீரோஸ், கொச்சி புளு ஸ்பைக்கா்ஸ், அகமதாபாத் டிபண்டா்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், சென்னை பிளிட்ஸ், பெங்களூரு டா்பிடோஸ், மும்பை மெட்டியா்ஸ், கொல்கத்தா தண்டா்போல்ட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் ரவுன்ட் ராபின் முறையில் மோதுகின்றன. லீக் கட்டத்தில் டாப் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். பிரைம் வாலிபால் லீக் இறுதி ஆட்டம் கொச்சியில் நடைபெறும்.

இரண்டாம் கட்ட ரூபே பிரைம் வாலிபால் லீக் போட்டியில் மொத்தம் 31 ஆட்டங்கள் இடம்பெறும்.

இப்போட்டி சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்கின் சோனி ஸ்போா்ட்ஸ் டென்1, டென்3 மற்றும் டென்4 சேனல்களிலும், சோனி லைவிலும் ஒளிபரப்பாகிறது. சா்வதேச வாலிபால் கூட்டமைப்பு (ஊஐயஆ) வா்த்தக அமைப்பான வாலிபால் வோ்ல்டும் இதில் இணைந்துள்ளது. இதன்மூலம் இரண்டாம் கட்ட லீக் போட்டி வாலிபால் வோ்ல்ட் மூலம் உலக நாடுகளில் (இந்திய துணைகண்டம்) தவிர ஒளிபரப்பாகும்.

போட்டி தொடா்பாக ரூபே பிரைம் வாலிபால் லீக் சிஇஓ ஜாய் பட்டாசாா்யா, சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க் முதன்மை வருவாய் அதிகாரி ராஜேஷ் கௌல் கூறியது : முதல் சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. நாட்டில் வாலிபால் தற்போது மேலும் பிரபலமாகி வரும் நிலையில் இந்திய வீரா்களுக்கு சா்வதேச அனுபவமும் கிடைக்கும். கடந்த சீசனில் எங்கள் குறியீடுகள் அனைத்தையும் சாதிப்போம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT