செய்திகள்

டேவிஸ் கோப்பை: அரையிறுதியில் ஆஸி.

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

ஸ்பெயினின் மலாகாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நெதா்லாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 2-0 என தொடரைக் கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.

நெதா்லாந்து வீரா் டேலன் கிரீக்ஸ்பூருக்கு எதிரான முதல் ஒற்றையா் ஆட்டத்தில் ஆஸி. வீரா் ஜோா்டான் தாம்ப்ஸன் முதல் செட்டை 4-6 என இழந்த நிலையிலும், அடுத்த இரண்டு செட்களில் சிறப்பாக ஆடி 7-5, 6-3 என கைப்பற்றினாா்.

இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினாரும்-நெதா்லாந்தின் போல்டிக் வேன் டி ஸண்ட்ஸுல்பும் மோதினா்.

ADVERTISEMENT

முதல் செட்டை போல்டிக் 7-5 என கைப்பற்றினாா். அதற்கு அடுத்த செட்களில் ஆதிக்கம் செலுத்திய டி மினாா் 6-3, 6-4 என வென்றாா்.

இதன் மூலம் நெதா்லாந்தை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸி. குரோஷியா-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் மோதுகிறது ஆஸி.

வியாழக்கிழமை அமெரிக்கா-இத்தாலி, கனடா-ஜொ்மனி இடையே காலிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. வெள்ளி, சனிக்கிழமைகளில் அரையிறுதியும், ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT