செய்திகள்

தோனிதான் என்னை சமாதானப்படுத்தினார்: ஷுப்மன் கில் நெகிழ்ச்சி

19th Nov 2022 05:08 PM

ADVERTISEMENT

இந்திய பேட்டர் ஷுப்மன் கில் எம். எஸ். தோனியுடனான ஒரு நெகிழ்ச்சி சம்பத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முக்கியமான இளம் வீரராக அறியப்படும் கில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 579 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 57.9 ஆகும். இதில் 3 அரைசதம், 1 சதம் அடங்கும். அதிகபட்சமாக 130 ரன்களை எடுத்துள்ளார். 

தோனி 2004இல் வங்க தேசத்திற்கு எதிராக ரன்னேதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகியிருப்பார். கில் அதை நினைவு கூர்ந்தார்.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கில் கூறியதாவது: 

2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான எனது முதல் ஒருநாள் போட்டியில் நான் 21 பந்துகளில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தேன்.  எனக்கு அப்போது 18-19 வயதிருக்கும் . மிகவும் கவலையாக உட்கார்ந்திருந்தேன்.அப்போது வந்த எம்.எஸ். தோனி என்னிடம், “உனது முதல் போட்டி என்னை விட சிறப்பானதாகவே இருந்தது” என்றார். எனக்கு சிரிப்பு வந்தது. அவருடைய முதல் போட்டி ஒரு பந்தும் விளையாடாமல் ரன் ரவுட் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். தோனியின் இந்த செயல் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. சோகத்தில் இருந்து மகிழ்ச்சி திரும்பியது. 
 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT