செய்திகள்

கேம்ரூன் க்ரீன் ஐபிஎல்-லில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன்: ஆஸி. கேப்டன்

18th Nov 2022 01:27 PM

ADVERTISEMENT

 

ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ளது. 2023 ஐபிஎல் போட்டியில் பங்குபெறப் போவதில்லை என ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் சமீபத்தில் அறிவித்தார். 

இந்நிலையில் ஆஸி. ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பற்றி கம்மின்ஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

ஐபிஎல் ஏலத்தில் கிரீன் பங்குபெறுவார் என நினைக்கிறேன். ஏலம் நடக்க இன்னும் கொஞ்ச நாள்கள் இருக்கின்றன. சுயநலம் கொண்ட கேப்டனாக, கிரீன் தன்னுடைய ஆற்றலையெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்காகச் செலவிட வேண்டும் என்றே எண்ணுவேன். ஆனால் அதுபோன்ற ஒரு வாய்ப்பு வரும்போது அதை வேண்டாம் எனச் சொல்லிவிடு என அவரிடம் நான் எப்படிக் கூற முடியும் என்று கூறியுள்ளார். 

Tags : Cummins IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT