செய்திகள்

மழை: கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 ஆட்டம்!

18th Nov 2022 01:39 PM

ADVERTISEMENT

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடவிருந்த முதல் டி20 ஆட்டம், விடாமல் பெய்த மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 18) தொடங்கிய டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. 

டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ADVERTISEMENT

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள்.

வெலிங்டனில் இன்று நடைபெறவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் டாஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இரவு 8.50 மணி அளவில் முதல் டி20 ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

வரும் ஞாயிறன்று 2-வது டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT