செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா செய்த தவறு: ஹீலி

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு தவறான அட்டவணை காரணமாக ஆஸ்திரேலிய அணி பாதிக்கப்பட்டதாக ஆஸி. முன்னாள் வீரர் இயன் ஹீலி கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி பற்றி முன்னாள் வீரர் இயன் ஹீலி கூறியதாவது:

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு அட்டவணை மிகவும் தவறாக அமைந்துவிட்டது. டவுன்ஸ்வில்-லில் மூன்று ஆட்டங்கள் விளையாடினார்கள். பிறகு கேர்ன்ஸ் நகரில் மூன்று ஆட்டங்கள். பிறகு இந்தியாவில் ஒரு வாரம் விளையாடினார்கள். பிறகு பெர்த், கேன்பராவில் விளையாடி கிழக்குப் பக்கம் வந்தார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இத்தனை ஆட்டங்களிலா விளையாடுவார்கள்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அட்டவணையைச் சரியாகத் திட்டமிட வேண்டும். இதுபோல அடுத்தமுறையும் ஆஸி. வீரர்களைச் சோர்வாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT