செய்திகள்

எவன் பண்ண வேலை இது?: ஐபிஎல் வதந்தி பற்றி அஸ்வின்

17th Nov 2022 03:53 PM

ADVERTISEMENT

 

டிசம்பர் 23 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கேன் வில்லியம்சன், பிராவோ, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வினை அந்த அணி விடுவிக்கவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அஸ்வினைத் தக்கவைத்துக்கொண்டது ராஜஸ்தான் அணி. இதுபற்றி தன்னுடைய யூடியூப் தளத்தில் அஸ்வின் கூறியதாவது: 

ராஜஸ்தான் அணி என்னை விடுவிக்க இருப்பதாக ட்விட்டரில் சொன்னார்கள். நிறைய பேர் அப்படிக் காலையில் சொன்னார்கள். சிலர் என்னை அழைத்து, ராஜஸ்தான் அணி உங்களை விடுவித்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றுகூடச் சொன்னார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. போன வருடம் நன்றாகத்தானே விளையாடினோம், சரி நம்மைப் பிடிக்காது போய்விட்டது போல என உட்கார்ந்திருந்தபோது ராஜஸ்தானிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களைத் தக்கவைத்துக் கொள்வது எங்களுக்குச் சந்தோஷமாக உள்ளது என்று. அதற்குப் பிறகு தான் தெரிய வந்தது, இது யார் செய்த வேலை, எவன் பண்ண வேலை என்று தெரியவில்லை. எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் நன்றாக இருந்தது. நம்மை விடுவிக்கவில்லை என்கிற உண்மை நமக்குத் தெரியும். ஆனால் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் அப்படிப் பேசும்போது, என் அம்மா கூட என்னடா ஆர்ஆர் அணி உன்னை விடுவித்து விட்டார்களாமே எனக் கேட்டார். ஆமாம், என்னை விடுவிக்க இருக்கிறார்கள். ஆனால் அதை ஆர்ஆர் அணியிலிருந்து சொல்லவில்லை, மற்றவர்கள் தான் சொல்கிறார்கள் என்றேன். இதுபோல வதந்திகளைக் கிளப்பி விடும்போது நன்றாகத்தான் உள்ளது. வெளியில் இருந்து நானே என்னைச் செய்தியாக இன்று பார்த்தேன் என்றார். 

ADVERTISEMENT

Tags : IPL ashwin
ADVERTISEMENT
ADVERTISEMENT