இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரைட்டன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அஷ்டன் வில்லா.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பிரைட்டனில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 49 விநாடிகளில் பிரைட்டன் வீரா் அலெக்ஸிஸ் மேக் தனது அணிக்கு முதல் கோலடித்தாா்.
இதையடுத்து பதில் கோலடிக்க அஷ்டன் வில்லா அணியினா் தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், அதன் வீரா் டேனி இங்ஸ் முதல் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் முதல் கோலடித்தாா்.
பின்னா் இரண்டாவது பாதியில் 54-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கோலடித்தாா் இங்ஸ். அதன் மூலம் 2-1 என வென்றது அஷ்டன் வில்லா.
இந்த வெற்றி மூலம் அஷ்டன் அணி 12-ஆவது இடத்துக்கு முன்னேறியது.