செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, இந்திய அணிகளுக்குக் கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு?

14th Nov 2022 12:56 PM

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 12.98 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து உலக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண். 

உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 1.6 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 12.98 கோடி. 2-ம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு இந்தத் தொகையில் பாதி கிடைத்துள்ளது. அதாவது ரூ. 6.49 கோடி. அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா ரூ. 3.24 கோடி பெற்றுள்ளன. சூப்பர் 12 சுற்றிலிருந்து வெளியேறிய 8 அணிகளும் தலா ரூ. 56.77 லட்சம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ. 45.40 கோடியாகும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT