செய்திகள்

அரை சதமெடுத்த பட்லர், ஹேல்ஸ்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் இலக்கு!

1st Nov 2022 03:15 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

பிரிஸ்பேனில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். இதனால் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் கிடைத்தது. 10 ஓவர்களின் முடிவில் 77 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டது இங்கிலாந்து. 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹேல்ஸ். 

13-வது ஓவரிலிருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார் பட்லர். 35 பந்துகளில் அரை சதமெடுத்தார். மொயீன் அலி 5 ரன்களிலும் லிவிங்ஸ்டன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 19-வது ஓவரில் புரூக் 7 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 73 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

3 ஆட்டங்களில் 3 புள்ளிகளைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படி வெற்றி கிடைத்தால் புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்துக்கு முன்னேறிவிடும். நியூசிலாந்து 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT