செய்திகள்

காலிறுதியில் மோதும் ஜோகோவிச் - நடால்

31st May 2022 07:17 AM

ADVERTISEMENT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் மோதுகின்றனர். 

முன்னதாக நடால் தனது 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 9-ஆவது இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமேவை எதிர்கொண்டார். இளம் வீரரான அலியாசிமே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, 5 செட்கள் போராடி அவரை வீழ்த்தினார் அனுபவ வீரரான நடால். 

வெற்றிக்குப் பிறகு பேசிய நடால், "உண்மையைக் கூற வேண்டுமென்றால், இப்போட்டியில் தற்போது ஆடும் ஒவ்வொரு ஆட்டத்தையும், பிரெஞ்சு ஓபனில் இதுதான் எனது கடைசி ஆட்டமாக இருக்குமோ என்ற எண்ணத்துடனேயே விளையாடுகிறேன். அதுதான் தற்போது எனது நிலையாக இருக்கிறது. அதனாலேயே முடிந்தவரை அனைத்து ஆட்டங்களையும் அனுபவித்து விளையாடுகிறேன்' என்றார். காயத்திலிருந்து மீண்டிருக்கும் நடால், வெள்ளிக்கிழமை 36-ஆவது வயதை எட்டுகிறார். 

3-0: நடப்பு சீசன் பிரெஞ்சு ஓபனில் இதுவரையிலான 3 சுற்றுகளிலும் நேர் செட்களில் வென்ற நடாலை, 4-ஆவது சுற்றில் 5 செட்கள் போராட வைத்தார் அலியாசிமே. என்றாலும் விடாமல் போராடி வென்ற நடால், இந்த கிராண்ட்ஸ்லாமில் இதுவரை மொத்தமாக 5 செட்கள் விளையாடிய ஆட்டங்களில் தனது வெற்றிக் கணக்கை 3-0 என உயர்த்திக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

வேறெந்த வீரரும் இத்தனை வெற்றியை 5 செட் ஆட்டங்களில் பெற்றதில்லை. 
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரேவ் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா மோதவுள்ளனர். 
முன்னதாக ஸ்வெரேவ் - ஸ்பெயினின் பர்னபி ஸபாடா மிரேல்ûஸயும், கார்ஃபியா - ரஷியாவின் காரென் கசானோவையும் வீழ்த்தினர். 

முன்னேறும் லெய்லா: மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனையான கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 
4-ஆவது சுற்றில், அமெரிக்காவின் அனுபவ வீராங்கனையான அமாண்டா அனிசிமோவாவை 6-3, 4-6, 6-3 என்ற செட்களில் வென்ற லெய்லா, காலிறுதியில் இத்தாலியின் மார்டினா டிரெவிசானை சந்திக்கிறார். 

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ கெüஃப் - ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மோதுகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT