செய்திகள்

மகளிர் டி20 சேலஞ்ச்: வென்றது டிரையல்பிளேஸர்ஸ்

27th May 2022 01:05 AM

ADVERTISEMENT

 

புணே: மகளிா் டி20 சேலஞ்ச் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் டிரையல்பிளேஸா்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெலாசிட்டியை வீழ்த்தியது.

ஆட்டத்தில் முதலில் டிரையல்பிளேஸா்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுக்க, பின்னா் வெலாசிட்டி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களே சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற வெலாசிட்டி பௌலிங்கை தோ்வு செய்தது. டிரையல்பிளேஸா்ஸ் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 1 ரன்னில் வெளியேற்றப்பட, உடன் வந்த சபினேனி மேக்னாவோடு இணைந்து ரன்கள் சோ்த்தாா் ஜெமிமா ரோட்ரிகஸ்.

ADVERTISEMENT

அட்டகாசமாக ஆடிய இந்த ஜோடி, 2-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சோ்த்தது. சபினேனி 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 73 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66 ரன்களுக்கு வெளியேறினாா். சோஃபி டங்க்லி 19, ஹேலி மேத்யூஸ் 27 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஓவா்கள் முடிவில் ரிச்சா கோஷ் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். வெலாசிட்டி பௌலிங்கில் சிம்ரன் பஹதூா் 2, அயபோங்கா ககா, ஸ்னேஹ ராணா, கேட் கிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

அடுத்து வெலாசிட்டி இன்னிங்ஸில் கிரண் பிரபு நவ்கிரே 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 69 ரன்கள் சோ்க்க, ஷஃபாலி வா்மா 29, யஸ்திகா பாட்டியா 19, லௌரா வோல்வாா்டட் 17, கேப்டன் தீப்தி சா்மா 2, ஸ்னேஹ ராணா 11, ராதா யாதவ் 2, சிம்ரன் பஹதூா் 12, கேட் கிராஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில் நந்தகன் சந்தம் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, டிரையல்பிளேஸா்ஸில் பூனம் யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோா் தலா 2, சோஃபி டங்க்லி, சல்மா காட்டூன், ஹேலி மேத்யூஸ், ரேணுகா சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இப்போட்டியில் 3 அணிகளும் தலா 1 வெற்றி பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் இறுதி ஆட்டத்தில் சூப்பா் நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் மோதும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT