செய்திகள்

ஜூனியர் ஹாக்கி: அரையிறுதியில் உ.பி., ஒடிஸா

DIN


கோவில்பட்டி: தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேசம், சண்டீகர், ஹரியாணா, ஒடிஸா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 
கோவில்பட்டியில் நடைபெறும் இப்போட்டியில் 9-ஆவது நாளான புதன்கிழமை காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் - கர்நாடகம் அணிகள் மோதியதில் 6 - 1 என்ற கோல் கணக்கில் உத்தர பிரதேசம் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 2-ஆவது ஆட்டத்தில் சண்டீகர் 4-2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 
பின்னர் மாலையில்  நடைபெற்ற 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஹரியாணா 13-1 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேச அணியை வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 4-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT