செய்திகள்

ஆஸி. அணியில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியல்

DIN

ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகச் சம்பளம் பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேட் கம்மின்ஸுக்கு ஒரு வருடத்துக்கு ரூ. 9 கோடியே 88 லட்சம் சம்பளம் (1.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) வழங்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் கேப்டனாகப் பணிபுரிவதற்காக வருடத்துக்கு ரூ. 1.10 கோடி (200,000 ஆஸ்திரேலிய டாலர்) கூடுதலாக அவருக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் வருடத்துக்கு 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அவருக்குச் சம்பளமாகத் தருகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இதையடுத்து ஆஸி. வீரர்களில் அதிகச் சம்பளம் பெறும் வீரராக கம்மின்ஸ் உள்ளார். இதுகுறித்த தகவல் ஆஸி.  ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

ஒரு வருடத்துக்கு அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் ஹேசில்வுட்டும் (ரூ. 8.78 கோடி) 3-ம் இடத்தில் டேவிட் வார்னரும் (ரூ. 8.23 கோடி) உள்ளார்கள். ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 7.13 கோடி. கடந்த வருடம் 5-ம் இடத்தில் இருந்த ஹேசிவுட் இந்த வருடம் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 2-ம் இடத்திலிருந்து 5-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் அடுத்ததாக விளையாடவுள்ளது. ஜுன் 7 அன்று டி20 தொடர் தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சிலம்ப கலைஞா்கள் விழிப்புணா்வு

தோ்தல் விதிமுறை: ரயில் பயணிகளிடம் சோதனை

குலசேகரத்தில் சிலுவைப் பாதை பவனி

‘இந்தியா’ கூட்டணியின் மெகா பேரணிக்கு தோ்தல் ஆணையம் அனுமதி?

கூட்டணி தா்மத்தை மீறாத கட்சி அதிமுக -எடப்பாட கே. பழனிசாமி

SCROLL FOR NEXT