செய்திகள்

மகளிர் டி20 சேலஞ்ச்: வென்றது வெலாசிட்டி

25th May 2022 03:17 AM

ADVERTISEMENT

 

புணே: ஐபிஎல் பிளே ஆஃபுக்கு இணையாக நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் வெலாசிட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாûஸ செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் சூப்பர்நோவாஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எட்ட, பின்னர் வெலாசிட்டி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வென்றது. 

முன்னதாக டாஸ் வென்ற வெலாசிட்டி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, சூப்பர்நோவாஸ் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் சேர்த்தார். பிரியா புனியா 4, டீன்ட்ரா டோட்டின் 6, ஹர்லீன் தியோல் 7, தானியா பாட்டியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஓவர்கள் முடிவில் சுனே லஸ் 20, பூஜா வஸ்த்ரகர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெலாசிட்டி பெளலிங்கில் கேட் கிராஸ் 2, தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

ADVERTISEMENT

அடுத்து வெலாசிட்டி இன்னிங்ஸில் ஷஃபாலி வர்மா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் அடிக்க, நத்தகன் சந்தம் 1, யஸ்திகா பாட்டியா 17 ரன்களுக்கு வீழ்ந்தனர். இறுதியில் லெளரா வோல்வார்டட் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, கேப்டன் தீப்தி சர்மா 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர். சூப்பர்நோவாஸ் தரப்பில் டீன்ட்ரா டோட்டின் 2, பூஜா வஸ்த்ரகர் 1 விக்கெட் எடுத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT