செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச், மெத்வதெவ் வெற்றி

25th May 2022 03:22 AM

ADVERTISEMENT


பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டெனியல் மெத்வதெவ் வெற்றி பெற்றனர். 
உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் 6-3, 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை எளிதாக வென்றார். 2-ஆம் இடத்தில் இருப்பவரான மெத்வதெவும் 6-2, 6-2, 6-2 என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஃபாகுண்டோ பக்னிûஸ தோற்கடித்தார். 
மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-0, 6-4 என பல்கேரியாவின் விக்டோரியா டோமோவாவை வீழ்த்த, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 6-3, 6-1 என்ற செட்களில் பிரான்ஸின் டெஸ்ஸா அண்ட்ரியானை வெளியேற்றினார். லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கா 6-1, 6-4 என இத்தாலியின் லூசியா பிரான்ùஸட்டியை தோற்கடித்தார். அத்துடன் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, ஸ்பெயினின் பெளலா பதோசா ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.  
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூஃப் கூட்டணி 6-4, 6-1 என பிரான்ஸின் லுகா வான் ஆஸ்சே/சாஷா கியுமார்டு கூட்டணியை வென்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT