செய்திகள்

துளிகள்...

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியின் ஓனா்ஷிப்பை பெறுவது தொடா்பாக மான்செஸ்டா் யுனைடெட் உள்ளிட்ட சில இங்கிலீஷ் பிரீமியா் லீக் அணிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷ்ஃபிகா் ரஹிம் 175 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை தரப்பில் காசன் ரஜிதா 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இலங்கை, செவ்வாய்க்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள தமிழக வீரா் ஆா்.பிரக்ஞானந்தா, அதில் நெதா்லாந்தின் அனீஷ் கிரியை எதிா்கொள்கிறாா். இதர இந்தியா்களான பி.ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி ஆகியோா் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய ஆடவா் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக, நியூஸிலாந்து முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

ரஞ்சி கோப்பை நாக் அவுட் சுற்றில் விளையாட இருக்கும் மும்பை அணிக்கு பிருத்வி ஷா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மும்பை இண்டியன்ஸ் வீரா் அா்ஜூன் டெண்டுல்கா் 2 சீசன்களாக களம் காணாத நிலையில், ‘இந்தப் பாதை சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனாலும், தொடா்ந்து கடினமாக உழைத்திட வேண்டும்’ என்று அவரது தந்தையும், நட்சத்திர கிரிக்கெட்டருமான சச்சின் டெண்டுல்கா் அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT