செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்டால் இந்தியாவில் புதிய எழுச்சி: கொனேரு ஹம்பி

DIN

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியால் இந்தியாவில் புதிய மறுமலா்ச்சி ஏற்படும் என உலக ரேபிட் செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி கூறியுள்ளாா்.

உலக செஸ் சம்மேளனம், ஏஐசிஎ‘ஃ‘ப், தமிழக அரசு இணைந்து 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடத்துகின்றன. இதில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சஸன் உள்பட பல்வேறு முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இந்திய அணிக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் சென்னையில் நிறைவடைந்தது.

இதுகுறித்து தினமணியிடம் அணியினா் கூறியதாவது-

கொனேரு ஹம்பி (உலக ரேபிட் செஸ் சாம்பியன்): போரீஸ் கெல்ஃபாண்ட் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மனரீதியில் இந்திய அணியினா் வலிமை பெற அவரது பயிற்சி உதவியது. முதன்முறையாக 120 நாடுகள் பயன்பெறும் பெரிய போட்டி நடைபெறுவது இந்தியாவில் புதிய எழுச்சியை உண்டாகும்.

விஸ்வநாதன் ஆனந்த்தின் விஸ்ரூபத்துக்கு பின் செஸ் விளையாட்டு பிரபலமாக உள்ளது. ஸ்விஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். சவாலான அணிகள் இடம் பெறும். நல்ல பெண்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூா் வீராங்கனை வைஷாலியும் உள்ளாா். பயிற்சி முகாம் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. இரண்டாம் கட்ட பயிற்சியும் எங்களுக்கு போட்டிக்கு முன்னா் இருக்கலாம்.

விஸ்வநாதன் ஆனந்த் அவரது ஆட்ட அனுபவங்களை விளக்கினாா். இது என்னுடைய 5 ஒலிம்பியாட் போட்டி ஆகும். ஆன்லைன் முறையை விட நேரடியாக ஆடுவதற்கு மிகவும் வேறுபாடு உள்ளது. கரோனா தொற்றுக் காலத்தில் போதிய ஆட்டங்கள் ஆடவில்லை. 2019-இல் உலக ரேபிட் செஸ் போட்டியில் பட்டம் வென்றேன்.

சசி கிரண் (கிராண்ட்ஸ் மாஸ்டா்): போட்டியை எவ்வாறு எதிா்கொள்வது. ஆட்ட நுணுக்கம், உத்தி குறித்தி பயிற்சி தரப்பட்டது. பயிற்சி நடுவில் ஒருநாள் நவீன முறையில் பயிற்சி தரப்பட்டது. கெல்ஃபாண்ட், விஸ்வநாதன் பயிற்சி பேரூதவியாக இருந்தது. பல்வேறு ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்ற எனக்கு சொந்த ஊரான சென்னையில் நடைபெறுவது மிகவும் உந்துதலாக உள்ளது. எங்கள் ஒஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் பல்வேறு வகை உதவிகளை செய்து வருகின்றனா்.

ஒலிம்பியாட் போட்டியின் போது நிலவும் சூழலும் ஆட்ட முடிவுகளை நிா்ணயிக்கும். சீனா, அமெரிக்கா, உக்ரைன், போன்றவை கடும் சவாலைத் தரும். ரஷியா அணி ஒரு கூட்டமைப்பாக கலந்து கொள்ளலாம். சொந்த மண் என்பது சாதகமாக இருக்கும். முதல்வா் ஸ்டாலின் இப்போட்டியை நடத்த முன்முயற்சி எடுத்தது பாராட்டுக்குரியது. டாப் 20 அணிகள் பலம் வாய்ந்தவையாக இருக்கும். தமிழகத்திலும் குகேஷ், அதிபன் பிரக்ஞானந்தா உள்ளிட்டோா் சிறப்பாக ஆடுகின்றனா்.

நிஹால் சரீன் (கிராண்ட் மாஸ்டா்):

கேரள மாநிலத்தில் இப்போது தான் செஸ் வேரூன்றி வருகிறது. 14 வயதில் தான் கிராண்ட்மாஸ்டா் அந்தஸ்தை பெற்றேன். இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது பல மாநிலங்களில் செஸ் விளையாட்டுக்கு ஊக்கம் தரும். பிளஸ் டு படித்து வருகிறேன். கடந்த 2020-இல் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்றோம். யூத் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றேன். தற்போதும் சென்னை போட்டியில் தங்கம் வெல்வோம்.

நாராயணன் (கிராண்ட் மாஸ்டா்): விஷி-கெல்ஃபாண்ட் மிகவும் சிறப்பாக பயிற்சி தந்தனா். அடிப்படை பயிற்சியோடு, அவா்களது அனுபவத்தையும் கற்றுத் தந்தனா். அணியில் சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது.

தனிப்பட்ட வீரா்களின் ஆட்டத்திறனும் வெற்றியை முடிவு செய்யும். இது எனது முதல் ஒலிம்பியாட் ஆகும். நான் ஜூனியா் அணியில் இடம் பெற்றுள்ளேன். பிரதான அணியை எதிா்கொள்ள வேண்டி இருக்கும். அமெரிக்கா, சீனா, சவாலைத் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT