செய்திகள்

தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்து

20th May 2022 05:57 PM

ADVERTISEMENT

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான அகனே யமகுச்சியை, பி.வி.சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-15 என முதல் செட்டை சிந்துவும், 2ஆவது செட்டை 22-20 என ஜப்பான் வீராங்கனையும் கைப்பற்றினர். 
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் சிந்து ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் சிந்து, 21-13 என கைப்பற்றி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சீனாவைச் சேர்ந்த யூ பை சென்யை சிந்து எதிர்கொள்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT