செய்திகள்

தாய்லாந்து ஓபன்:  காலிறுதியில் சிந்து

20th May 2022 04:05 AM

ADVERTISEMENT


பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் அவர் 21-16, 21-13 என்ற கேம்களில் தென் கொரியாவின் சிம் யு ஜின்னை தோற்கடித்தார். அடுத்ததாக காலிறுதியில், ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொள்கிறார் சிந்து. 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்பாக போட்டியிலிருந்து விலகினார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

மகளிர் ஒற்றையரில் மாளவிகா பன்சோத், கலப்பு இரட்டையரில் இஷான் பட்நாகர்/தனிஷா கிராஸ்டோ, மகளிர் இரட்டையரில் அஷ்வினி பாட்/ஷிகா கெளதம் ஆகியோர் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT