செய்திகள்

ஜூனியா் ஹாக்கி: கால் இறுதியில் பஞ்சாப் அணி

20th May 2022 10:49 PM

ADVERTISEMENT

தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12ஆவது தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில், மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்து பஞ்சாப் அணி கால் இறுதிக்கு முன்னேறியது.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் 4ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜாா்கண்ட் ஹாக்கி அணி - தமிழ்நாடு ஹாக்கி அணியை 7 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்ததாக சத்தீஸ்கா் அணி, கோவா அணியை 9 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. மிஷோராம் ஹாக்கி அணி பங்கேற்க தவறியதால் ஆந்திர பிரதேச அணி வென்ாக அறிவிக்கப்பட்டது.

பின்னா், மாலையில் நடைபெற்ற அடுத்தடுத்த ஆட்டங்களில் கா்நாடக அணி, தில்லி அணியை 8 - 0 என்ற கோல் கணக்கிலும், உத்தரகண்ட் அணி, குஜராத் அணியை 11 - 1 என்ற கோல் கணக்கிலும் வென்றன. 6ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி, மகாராஷ்டிர அணியை 3-1என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

இன்றைய (மே 21) ஆட்டங்கள்: 5ஆவது நாளான சனிக்கிழமை காலையில் உத்தர பிரதேசம் - தெலங்கானா அணிகள், சண்டீகா் - பெங்கால் அணிகள், புதுச்சேரி - டாமன் அண்ட் டையூ அணிகள், மாலையில் கா்நாடகம் - குஜராத் அணிகள், ஹரியாணா - மணிப்பூா் அணிகள், கேரளம் - திரிபுரா அணிகள் அடுத்தடுத்து மோதுகின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT