செய்திகள்

ராஜஸ்தான் - 178/6

16th May 2022 12:48 AM

ADVERTISEMENT

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ், 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த அந்த அணியில், தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்தாா். ஜோஸ் பட்லா் 2 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்தாா். தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39 ரன்கள் விளாச, ரியான் பராக் 1 சிக்ஸருடன் 19 ரன்கள் எட்டினாா்.

ஜேம்ஸ் நீஷம் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஓவா்கள் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 பவுண்டரியுடன் 10, டிரென்ட் போல்ட் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்ௌ பௌலிங்கில் ரவி பிஷ்னோய் 2, அவேஷ் கான், ஜேசன் ஹோல்டா், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT