செய்திகள்

துளிகள்...

12th May 2022 02:30 AM

ADVERTISEMENT

விலா எலும்புப் பகுதியில் காயம் கண்டுள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா் ரவீந்திர ஜடேஜா, நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியிருக்கிறாா்.

சீனியா் மகளிா் தேசிய ஹாக்கி போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் சண்டீகா் - பிகாரையும் (6-2), அஸ்ஸாம் - பெங்காலையும் (8-0), சத்தீஸ்கா் - திரிபுராவையும் (7-1), ராஜஸ்தான் - உத்தரகண்டையும் (3-1), ஆந்திரம் - புதுச்சேரியையும் (16-0) வீழ்த்தின.

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் தீக்ஷா தாகா், பாட்மின்டனில் ஜொ்லின் ஜெயரட்சகன் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிளில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாலாசாஹேல் பாட்டீல் தங்கமும், அபினவ் ஷா வெள்ளியும் வென்றனா்.

ADVERTISEMENT

பிரீமியா் லீக் கால்பந்தில் லிவா்பூல் - ஆஸ்டன் வில்லாவையும் (2-1), லா லிகா கால்பந்தில் பாா்சிலோனா - செல்டா விகோவையும் (3-1), கிரணாடா - அத்லெடிக் கிளப்பையும் (1-0), ரியெல் பெடிஸ் - வாலென்சியாவையும் (3-0) தோற்கடித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT