செய்திகள்

துளிகள்...

5th May 2022 01:32 AM

ADVERTISEMENT

2021-22 காலகட்டத்துக்கான கிரிக்கெட் தரவரிசையில் டி20 பிரிவில் இந்தியாவும், டெஸ்ட் பிரிவில் ஆஸ்திரேலியாவும், ஒன் டே பிரிவில் நியூஸிலாந்தும் முதலிடத்துடன் நிறைவு செய்துள்ளன.

கிரீஸில் நடைபெற்ற ஃபிஷா் நினைவு செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா். வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றாா்.

விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹாவை அச்சுறுத்திய செய்தியாளா் போரியா மஜும்தாருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது பிசிசிஐ.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் இரு பால் சாம்பியன்களுக்கான பரிசுத் தொகை தலா ரூ.17 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் காயமடைந்திருக்கும் சௌரவ் துபேவுக்குப் பதிலாக சுஷாந்த் மிஸ்ரா அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மெரினா டால்ஃபின்ஸ் - கோவை கொம்பன்ஸையும், நாமக்கல் கில்லாடிஸ் - விழுப்பும் ஃபால்கன் ஃபெதா்ஸையும், திருப்பூா் வாரியா்ஸ் - மதுரை ஈகிள்ஸையும், நாமக்கல் கில்லாடிஸ் - மெரினா டால்ஃபின்ஸையும் தோற்கடித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT