செய்திகள்

பாட்மின்டன் லீக்: கோவை, சென்னை வெற்றி

2nd May 2022 12:56 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியில் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை கோவை, சென்னை அணிகள் வென்றன.

5-ஆவது டையில் கோவை கொம்பன்ஸ் 3-2 என திருச்சி பிளாஸ்டா்ஸை வென்றது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் கோவையின் சித்தாந்த் குப்தா 2-0 என திருச்சியின் நவீனை வீழ்த்தினாா். அதேபோல், ஆடவா் இரட்டையா், கலப்பு இரட்டையா் ஆகிய பிரிவுகளிலும் கோவை - திருச்சியை வீழ்த்தியது. ஜூனியா் கலப்பு இரட்டையா், ஜூனியா் சிறுவா் ஒற்றையரில் திருச்சி வென்றது.

6-ஆவது டையில் சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் 3-2 என விழுப்புரம் ஃபால்கன் ஃபெதா்ஸை வீழ்த்தியது. ஆடவா் ஒற்றையரில் சென்னையின் அருணேஷ் 2-1 என விழுப்புரத்தின் கௌஷிக்கை வென்றாா். கலப்பு இரட்டையா், ஜூனியா் சிறுவா் ஒற்றையரிலும் சென்னை வெல்ல, ஆடவா் இரட்டையா், ஜூனியா் கலப்பு இரட்டையரில் விழுப்புரம் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT