ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
தொடர்ந்து 10-ஆவது ஆண்டாக மும்பை அணி தோல்வியுடன் ஒரு சீசனை தொடங்க, டெல்லி வெற்றியுடன் கணக்கை ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது. அடுத்து டெல்லி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வென்றது. டெல்லி வீரர் குல்தீப் ஆட்டநாயகன் ஆனார்.
டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங் செய்ய, மும்பை பேட்டிங்கில் இஷான் கிஷண் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 41, திலக் வர்மா 22, டிம் டேவிட் 12, அன்மோல்பிரீத் சிங் 8, டேனியல் சேம்ஸ் 7, கிரன் பொல்லார்டு 3 ரன்கள் சேர்த்தனர். டெல்லி பெளலிங்கில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் டெல்லி இன்னிங்ஸில் லலித் யாதவ் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்த, அக்ஸர் படேல் 38 ரன்களுடன் துணை நின்றார். பிருத்வி ஷா 38, ஷர்துல் தாக்குர் 22, டிம் செய்ஃபர்ட் 21, கேப்டன் ரிஷப் பந்த் 1 ரன் அடித்தனர். மன்தீப் சிங், ரோவ்மேன் பாவேல் ஆகியோர் டக் அவுட்டாகினர். மும்பை பெளலிங்கில் பாசில் தாம்பி 3, முருகன் அஸ்வின் 2, டைமல் மில்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.