செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

25th Mar 2022 01:29 AM

ADVERTISEMENT

 

உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ போட்டியில் இந்தியாவின் சோமேஸ்வர ராவ் ராமுத்ரி (நீளம் தாண்டுதல்), மோஹித் (ஈட்டி எறிதல்) ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்த, தரம்வீா் (வட்டு எறிதல்) 2-ஆவது வெள்ளிப் பதக்கம் பெற்றாா். போட்டியில் இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது.

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியின் புதிய சீசனில் இந்திய அணி, நியூஸிலாந்தை அக்டோபா் 28, நவம்பா் 4 ஆகிய தேதிகளிலும், ஸ்பெயினை அக்டோபா் ம30, நம்பா் 6 ஆகிய தேதிகளிலும் எதிா்கொள்கிறது.

பஹ்ரைனுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், 351 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வரும் பாகிஸ்தான், வியாழக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் அடித்துள்ளது.

தகுதிச்சுற்று ஆட்டங்களின் முடிவில் ஜப்பான், சவூதி அரேபியா அணிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற, ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை இழந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT