நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி, தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
33 வயது செளதி, நியூசிலாந்து அணிக்காக 2008 முதல் 85 டெஸ்டுகள், 143 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் டிம் செளதியை ரூ. 1.5 கோடிக்கு கேகேஆர் அணி தேர்வு செய்தது.
பிரயா ஃபேஹியை நீண்டகாலமாகக் காதலித்து வருகிறார் செளதி. இருவருக்கும் இண்டி, ஸ்லோன் என இரு பெண் குழந்தைகள் உண்டு. 2017-ல் இண்டியும் 2019-ல் ஸ்லோனும் பிறந்தார்கள். இந்நிலையில் பிரயா ஃபேஹியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் செளதி. திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.