செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை: குடும்பத்துக்காகப் போட்டியை விட்டு விலகிய நியூசி. உதவிப் பயிற்சியாளர்

21st Mar 2022 11:25 AM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து மகளிர் அணியின் பயிற்சியாளர் ஜகோப் ஓரம், உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, 2-ல் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசி. அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற இதர அணிகளுடன் போட்டியிட முடியும். 

நியூசிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜகோப் ஓரம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓரமின் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து குடும்பத்தினருக்கு உதவுவதற்காக உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஓரம் விலகியுள்ளார். இதுபற்றி நியூசி. அணியின் பயிற்சியாளர் பாப் கார்டர் கூறியதாவது:

ADVERTISEMENT

நிச்சயமாக குடும்பம் தான் முக்கியம் என்பதால் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என்கிற ஓரமின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறோம் என்றார். 

Tags : New Zealand
ADVERTISEMENT
ADVERTISEMENT