செய்திகள்

தீவிரப் பயிற்சியில் சென்னை சூப்பா் கிங்ஸ்

21st Mar 2022 05:09 AM

ADVERTISEMENT

ஐபிஎல் 2022 சீசன் தொடா் வரும் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கும் நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மும்பையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும்-கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை, புணே ஆகிய 2 நகரங்களில் 4 மைதானங்களில் ஐபிஎல் தொடா் நடைபெறவுள்ளது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தலைமையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் அணியில் மொயின் அலி ரூ.8 கோடி, ருதுராஜ் கெய்க்வாட் ரூ.8 கோடி, ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடி, கேப்டன் தோனி ரூ.12 கோடி ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. பௌலா் தீபக் சஹாரை ரூ.14 கோடி ஏலத்தில் எடுத்தது. கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினாா் சஹாா்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரா்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT