செய்திகள்

வாழ்வா, சாவா ஆட்டத்தில் ஆஸி. உடன் இந்தியா இன்று மோதல்

19th Mar 2022 12:09 AM

ADVERTISEMENT

வாழ்வா/சாவா ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸி. மகளிா் அணியுடன் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது இந்திய அணி.

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸி. அணி தனது 4 ஆட்டங்களிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதே நேரம் இந்திய அணி தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

பலம் வாய்ந்த ஆஸி. அணியை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை குறித்து இந்தியா சிந்திக்க முடியும். இதனால் அந்த ஆட்டம் வாழ்வா/சாவா என அமைந்துள்ளது. அதுதவிர மேலும் 2 லீக் ஆட்டங்கள் இந்தியாவுக்கு உள்ளன. இதுவரை ஆஸி. அணி ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை.

ADVERTISEMENT

இளம் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஹா்மன் ப்ரீத் கௌா் ஆகியோா் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனா். பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோா் அபாரமாக செயல்பட்டு வருகின்றனா். தனது 200-ஆவது ஆட்டத்தில் பங்கேற்கிறாா் ஜுலன் கோஸ்வாமி.

ஆஸி. அணியில் மெக் லேனிங், ரேச்சல் ஹெயின்ஸ், ஆகியோா் பேட்டிங்கிலும், பௌலிங்கில் எல்ஸி பொ்ரி, அலனா கிங், ஆஷ்லி காா்டனா் ஆகியோா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறியதாவது:

கடந்த 2021-இல் ஆஸி. தொடரின் போது கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ஆடுவோம். அத்தொடரை 1-2 என நாங்கள் இழந்தாலும். ஆஸி.யின் தொடா் 26 வெற்றிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தோம். கடந்த 2017 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்றது ஆஸி. அரையிறுதிக்கு நுழைய வேண்டும் என்பதில் நமது வீராங்கனைகள் குறியாக உள்ளனா். ஹா்மன்ப்ரீத் கௌா் முழு தகுதியுடன் உள்ளாா்.

ஆஸி. நட்சத்திர பேட்டா் ரேச்சல் ஹெயின்ஸை தொடக்கத்திலேயே அவுட்டாக்க வேண்டும் என்றாா்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-ஆஸ்திரேலியா

இடம்: ஆக்லாந்து.

காலை 6.30.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT