செய்திகள்

இந்தியாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி தரும் நியூசி. வீராங்கனை

10th Mar 2022 04:44 PM

ADVERTISEMENT

 

அமீலியா கெர்.

இந்தப் பெயரைக் கேட்டாலே இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் நடுங்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

சமீபகாலமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஏராளமான ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிவிட்டது இந்திய அணி. அனைத்திலும் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்துள்ளார் அமீலியா கெர்.

ADVERTISEMENT

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. இன்றும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டார் அமீலியா கெர். பேட்டிங்கில் 64 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தவர், பந்துவீச்சில் 9 ஓவர்கள் வீசி 56 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களிலும் குறைந்தது அரை சதம் எடுத்ததோடு பந்துவீச்சிலும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது எடுத்துள்ளார். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் வேறு யாரும் இப்படி ஓர் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களிலும் 50+ ஸ்கோரும் பந்துவீச்சில் குறைந்தது ஒரு விக்கெட்டும் எடுத்ததில்லை. 

21 வயது அமீலியா கெர் இதுவரை 49 ஒருநாள், 42 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிராக அமீலியா கெர்: கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில்...

119* & 1/43
67 & 1/60
68* & 3/30
66 & 1/55
50 & 3/56

Tags : Amelia Kerr
ADVERTISEMENT
ADVERTISEMENT