செய்திகள்

துளிகள்...

10th Mar 2022 02:23 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தவரும், கபில் தேவுக்கு பிறகான காலகட்டத்தில் சிறந்த அவுட் ஸ்விங் பௌலராக அறியப்பட்டவருமான ஸ்ரீசாந்த், அனைத்து விதமான உள்நாட்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.

ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிவேதிதா காா்கி (48 கிலோ), தமன்னா (50 கிலோ) ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேற, ரேனு (52 கிலோ) வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினாா்.

இஸ்தான்புல்லில் நடைபெற இருக்கும் மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாா்பில் நீது (48 கிலோ), அனாமிகா (50 கிலோ), நிகாத் ஜரீன் (52 கிலோ), சிக்ஷா (54 கிலோ), மனிஷா (57 கிலோ), ஜேஸ்மின் (60 கிலோ), பா்வீண் (63.5 கிலோ), அங்குஷிதா போரோ (66 கிலோ), லவ்லினா போா்கோஹெய்ன் (70 கிலோ), சவீதி பூரா (75 கிலோ), பூஜா ராணி (81 கிலோ), நந்தினி (81+ கிலோ).

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயரன் முனீச், லிவா்பூல் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றன.

ADVERTISEMENT

இண்டியன்வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறினாா்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி - கானா (ஜூலை 31), இங்கிலாந்து (ஆகஸ்ட் 1), கனடா (ஆகஸ்ட் 3), வேல்ஸ் (ஆகஸ்ட் 4) ஆகிய அணிகளையும், மகளிா் அணி - கானா (ஜூலை 29), வேல்ஸ் (ஜூலை 30), இங்கிலாந்து (ஆகஸ்ட் 2), கனடா (ஆகஸ்ட் 3) ஆகிய அணிகளையும் சந்திக்கின்றன.

ஜொ்மன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை, ஷுபாங்கா் டே, எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை, அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை தோல்வியைத் தழுவின.

ADVERTISEMENT
ADVERTISEMENT