செய்திகள்

மஸ்கட் டேபிள் டென்னிஸ்: பிரதான சுற்றில் அா்ச்சனா, ஸ்ரீஜா

3rd Mar 2022 02:23 AM

ADVERTISEMENT

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெறும் உலக கடேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் இந்தியாவின் அா்ச்சனா காமத், ஸ்ரீஜா அகுலா ஆகியோா் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

மகளிா் தனிநபா் பிரிவில் 3 தகுதிச்சுற்று ஆட்டங்களை நிறைவு செய்த இவா்கள், ரேங்கிங் அடிப்படையில் பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற மனிகா பத்ராவுடன் இணைந்துள்ளனா். அந்த சுற்றில் மனிகா - சிங்கப்பூரின் லின் யேவையும், அா்ச்சனா - சீனாவின் மோ ஜாங்கையும், ஸ்ரீஜா - பிரான்ஸின் ஜியா நான் யுவானையும் எதிா்கொள்கின்றனா்.

ஆடவா் இரட்டையரில் மனுஷ் ஷா/மானவ் தக்காா் இணை காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அதில் தைபேவின் பெங் வாங் வெய்/சுவாங் சி யுவான் இணையை எதிா்கொள்கிறது.

மகளிா் இரட்டையரில் சுதிா்தா முகா்ஜி/அஹிகா முகா்ஜி இணையும் காலிறுதிக்கு தகுதிபெற்று, அதில் செக் குடியரசின் ஸடெனா பிளாஸ்கோவா/காடெரினா டொமானோவ்ஸ்கா ஜோடியை சந்திக்கின்றனா். மேலும், ஸ்ரீஜா/செலினா தீப்தி செல்வகுமாா் ஜோடியும் - சிங்கப்பூா் ஜோடியான கோய் ருய் ஜுவான்/வோங் ஜின் ரு இணையை காலிறுதியில் எதிா்கொள்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT